தலைவர் க.சக்திவேல் பொங்கல் வாழ்த்துச் செய்தி

பத்திரிக்கை செய்தி – நாள் : 14-01-2019

தேசிய இனங்களின் கூட்டாச்சியை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவில் ஏற்படுத்தவும், தமிழர் அடையாளத்தை மீட்டெடுக்கவும் பொங்கலில் உறுதி எடுப்போம்

தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் பொங்கல் வாழ்த்துச் செய்தி

தமிழர்கள் தனி இனமாக உயர்ந்த நாகரீகத்தோடும், வீரத்தோடும், நாடுகளை ஆண்ட இனமாக இருந்த நிலை மாறி நாடற்ற இனமாக வாழ்ந்து வருவது மட்டுமின்றி, தங்களின் தமிழ்த் தேசிய பண்பாட்டு அடையாளங்களை இழந்து வருகிறார்கள். இல்லாத திராவிட இனமாக, இந்து மதமாக தமிழினம் இன்று அடையாளப்படுத்துதல் தடுக்கப்பட வேண்டும்.

இத்தகைய நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்திடுத்திடுவோர் வெற்றிப் பெற்று இந்திய அளவில் தமிழர், தமிழக உரிமைகளை பாதுகாக்க உறுதி பூண்டோரை தேர்ந்தெடுத்து அனுப்பிட உறுதி ஏற்போம்.

தமிழ்த் தேசிய இனம் தனது தமிழ்த் தேசிய, பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்கவும் தேசிய இனங்களின் கூட்டாச்சியை இந்தியாவில் உருவாக்கவும், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலில் உறுதி ஏற்போம் என்ற நிலையில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துக்களை உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

க.சக்திவேல்
தலைவர்
+91 94983 82006

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*