தமிழர்களுக்கு நிறைவான மகிழ்ச்சியை தரும் ஆண்டாக 2019ம் ஆண்டு அமைந்திட வேண்டும். தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் வாழ்த்து செய்தி.

பத்திரிக்கை செய்தி – 31-12-2018


தமிழர்களுக்கு நிறைவான மகிழ்ச்சியை தரும் ஆண்டாக 2019ம் ஆண்டு அமைந்திட வேண்டும்

தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர்.சக்திவேல் வாழ்த்து செய்தி

2018ஆம் ஆண்டு இனிப்பும் கசப்பும் நிறைந்த ஆண்டாக 
தமிழருக்கு அமைந்துவிட்டது. 50 ஆண்டுகளாக நீடித்த 
காவிரி பிரச்சனை முடிவுக்கு வந்தது. ஆனால், மேகதாது
அணை ஆய்வுக்கு  மத்திய அரசு அனுமதி அளித்து 
புதிய பிரச்சனையை உண்டாக்கி உள்ளது. 
கஜா புயல் தாக்கத்தில் தமிழகத்தின் பெரும்பாலான 
மாவட்டங்கள் நிலை குலைந்து போய்விட்டது. இருப்பினும் 
தமிழர்களின் நம்பிக்கை காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் 
தேறிவருகிறார்கள். 
இலங்கையில் மீண்டும் கொடுங்கோலன் 
ராஜபக்சே மீண்டும் ஆட்சிக்கு வந்து, உலகத் தமிழர்களிடம் 
ஆட்கொண்ட வேதனை, இலங்கை நீதி மன்ற நடவடிக்கைகளால்,
ராஜபக்சே பதவி நீடிக்காமல் தமிழர்களின் வேதனை தீர்ந்தது.
இப்படி, இனிப்பும் கசப்புமான 
தமிழர் வாழ்வியலில் புதிய நம்பிக்கையை விதையை தூவிட 
2019 ஆண்டு விளங்கிடும் என்ற எதிர்பார்ப்புடன் 
2019ஆம் ஆண்டை வரவேற்று தமிழக முற்போக்கு கட்சி சார்பாக 
வாழ்த்துக்ககளை தெரிவித்துக்கொள்கிறேன். 
.சக்திவேல்,
தலைவர்
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி.
www.tmmkatchi.org
tmmkatchi@gmail.com. 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*