மேகதாது அணை ஆய்வுக்கு அனுமதி அளித்த, மத்திய அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

பத்திரிக்கை செய்தி – 13.12.2018

மேகதாது அணை ஆய்வுக்கு அனுமதி அளித்த, மத்திய அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில்
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை ஆய்வுக்கு அனுமதி அளித்த, மத்திய அரசை கண்டித்தும் கஜா புயலுக்கு உரிய நிவாரணம் அளிக்காத மத்திய அரசை கண்டித்து தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் தலைமையில் 13-12-2018, வியாழன் அன்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் துணைத் தலைவர்கள் போரூர் ஜெ.ஜெயவீரன், துளசி வீராச்சாமி, அரசியல் குழுத் தலைவர்புரசை N.லோகநாதன், செயலாளர்கள் வி.விஜயகுமார், ந‌ன்மங்கலம் மா.இமானுவேல், வழக்கறிஞர் ச.செந்தில்குமார், மகளிர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் வி.அமுதா, கலைப் பிரிவுச் செயலாளர் நடிகர் C.S.ராஜன், தென் சென்னை மாவட்டத் தலைவர் கோபால், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் சோபன் பாபு, காஞ்சிபுர மாவட்டச் செயலாளர் சுரேசு மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

வி.விஜயகுமார்
செயலாளர்
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*