பத்திரிக்கை செய்தி – 05.12.2018 மேகதாது அணைக்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து டிசம்பர் 13 ஆம் தேதி சென்னையில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி ஆர்பாட்டம்.

பத்திரிக்கை செய்தி – 05.12.2018

பெறுநர்,
உயர்திரு. ஆசிரியர்,

மேகதாது அணைக்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து டிசம்பர் 13 ஆம் தேதி சென்னையில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி ஆர்பாட்டம்.

தமிழகத்தின் டெல்டா பகுதிகள் பல்லாண்டு காலமாக சந்தித்த காவிரி பிரச்சனைகளுக்கு தீர்வாக காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் செயல்பாடுகள் இன்னும் முழுமையாக அறியபடாத நிலையில், மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடகாவுக்கு மத்திய அரசு அளித்த அனுமதி என்பது ஏற்க முடியாத ஒன்று.
அதுவும், கஜா புயலினால் காவிரி டெல்டா பகுதி முழுமையாக பாதிக்கப்பட்டு நிலைகுலைந்த நிலையில் மத்திய அரசின் கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்று மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளித்துள்ள செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியும் மத்தியில் ஆளும் பா.ஜ.கவும் கர்நாடக நலனை மட்டுமே கணக்கில் கொண்டு இச்செயலில் இறங்கி உள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் கர்நாடக அரசியலை குறி வைத்து தமிழகத்தை வஞ்சிக்கும் செயலில் இறங்கி உள்ளன. தமிழகம் என்றாலே ஒரு தலைப்பட்சமான நிலைப்பாட்டை பா.ஜ.கவும் காங்கிரஸும் எடுத்து வருகின்றன. இது தவிர தமிழகத்திற்கு புயல் நிவாரணம் மிக குறைவாகவே அளித்தல் இப்படி தமிழகத்தை வஞ்சிக்கும் செயலில் மத்திய அரசு செயல்பட்டுவருகிறது.

இதனை கண்டிக்கும் விதமாகவும் மேகதாது அணைக்கு விரிவான ஆய்வு ஆய்வறிக்கையை திரும்பப்பெறக் கோரியும் கஜா புயலுக்கு அதிக நிவாரணம் அளிக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்ற 13-12-2018 ( வியாழன்) காலை 11 மணி முதல் 1மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

க.சக்திவேல்,
தலைவர்,
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*