பத்திரிக்கை செய்தி -25-07-2018 – 50% முதல் 100% வரை சொத்து வரி உயர்வு கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும். தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் அறிக்கை

பத்திரிக்கை செய்தி

50% முதல் 100% வரை சொத்து வரி உயர்வு கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்.

தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் அறிக்கை

சென்னை உயர் நீதிமன்றம் சொத்துவரியை மாற்றியமைப்பது குறித்து இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்ததை அடிப்படையாகக் கொண்டு, சொத்து வரியை 50 சதவிகிதத்திலிருந்து 100 சதவிகிதமாக உயர்த்தித் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும், ஒரே மாதிரி சொத்துவரி இருக்கும் வகையில் புதிய சொத்துவரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது மட்டுமே ஏற்றுக் கொள்ளகூடிய ஒன்றாக உள்ளது. மற்றபடி, நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிப் பகுதியில் இருக்கும் நடுத்தர மக்களுக்குப் பெரும் சுமையாக இந்த வரி உயர்வு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புக்களே செயல்பாடாத நிலையில் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தேடுக்கப்பட்டுப் பொறுப்பேற்றப் பின்னர் அவர்களைக் கலந்து செய்ய வேண்டிய ஒரு செயலை தமிழக அரசு செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சென்னை உயர் நீதிமன்றம் கூறியதால் செய்கிறேன் என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தகைய முடிவுகளில் சென்னை உயர்நீதி மன்றமே கூறினாலும் வரி உயர்வு முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதையும் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தேடுக்கப்பட்ட பின்னர்க் கருத்துக்கேட்டு முடிவுகள் மேற்கொள்ளபடும் என்பதையாவது தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கவேண்டும். மாற்றாக, சொத்து வரியை உயர்த்தி இருப்பதை வன்மையாகக் கண்டிப்பதோடு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமன தமிழக அரசை .தமிழக முற்போக்கு மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

க.சக்திவேல்

தலைவர்

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*