29-06-2018 பத்திரிக்கை செய்தி தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் துணைத் தலைவராக‌ ஜெ.ஜெயவீரன், தொழிலாளர் அணிச் செயலாளராக‌ பிராட்வே மணி நியமனங்கள் தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் அறிவிப்பு.

பத்திரிக்கை செய்தி 29-06-2018

 

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின்

துணைத் தலைவராக‌ ஜெ.ஜெயவீரன்,

தொழிலாளர் அணிச் செயலாளராக‌ பிராட்வே மணி நியமனங்கள்

தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல் அறிவிப்பு.

  

1) துணைத் தலைவர் திரு.ஜெ.ஜெயவீரன்

 சென்னை போரூரைச் சேர்ந்த திரு.ஜெ.ஜெயவீரன் அமைதிப் படை வார இதழின் ஆசிரியரும் சமூகச் செயற்பாட்டாளரும் ஆவார். தமிழகத்தில் ஜனநாயக உரிமைகளைக் காப்பதற்காகவும் இலஞ்ச லாவண்யமற்ற தமிழகத்தை உருவாக்க வேண்டுமென்பதையும் வலியுறுத்தி தொடர்ந்து செயல்பட்டு வருவது மட்டுமின்றி, தனது வார இதழின் வழியாக இதற்கான தர்ம யுத்ததைத் தொடர்ந்து நடத்தி வருபவர்.

 

2) தொழிலாளர் அணிச் செயலாளர் பிராட்வே திரு.மணி

தெருவோர கடை வணிகர்களின் உரிமைகளுக்காகப் போராடி வருபவர். குறிப்பாகச் சென்னை என்.எஸ்.சி.போஸ் சாலை தெருவோர கடை வணிகர்களின் சங்கத் தலைவராக‌ செயற்பட்டு வருகிறார்.

 

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் துணைத் தலைவர் திரு. ஜெ.ஜெயவீரன், தொழிலாளர் அணிச் செயலாளராக‌ பிராட்வே திரு. மணி நியமிக்கப்பட்டுள்ளதை தங்கள் பத்திரிக்கையில் வெளியிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

இப்படிக்கு

க.சக்திவேல்,

தலைவர்,

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*