தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்

பத்திரிகை செய்தி

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி  தலைவர் க.சக்திவேல் அறிக்கை.

கடந்த 10.6.2018 அன்று காவிரி உரிமை மீட்பு குழுவின் தலைவரும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவருமான  தாக்கப்பட்டதை  வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்த் தேசியத்தின் அடிப்படைகளை ஆணித்தரமாக எடுத்துரைத்தும் விவசாயிகளின் உரிமைப் போராட்டங்களை முன்னின்று நடத்தி வரும் திரு. பெ.மணியரசன் மீதான தாக்குதல் பொது வாழ்க்கையில் ஈடுபடும் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையோ என்று எண்ணுகிறேன் நிலையை ஏற்படுத்தி உள்ளது. அதுவும்  குறிப்பாக  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 11.6.2018 அன்று, சட்டப்பேரவையில்    அளித்த விளக்கமும் அதனை தெளிவுப்படுத்தி திரு.பெ.மணியரசன் அளித்த விளக்கமும் அரசின் நடவடிக்கைகள் மீது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு இந்த நிகழ்வை சாதாரண வழிப்பறியாக காட்ட முயல்கிறது ஆனால் திரு.பெ.மணியரசன் தெளிவாக “இருநபர்கள்  வண்டியை எங்கள் வண்டிக்கு இடதுபுறமாக நெருக்கமாக ஓட்டி வந்து, எங்கள் வண்டி ஓடிக் கொண்டிருக்கும் போதே அந்த வண்டியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் எனது இடது கையைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளினர். ஆனால் நான் சுதாரித்துக் கொண்டு வலது கையால் இருக்கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருக்கையில் அமர்ந்து கொண்டேன். மறுபடியும் அதேபோல் எனது இடது கையைப் பிடித்து அதே நபர் என்னைக் கீழே தள்ள முயன்றார். அப்போதும் நான் சமாளித்து இருக்கையில் இருத்திக் கொண்டேன். மூன்றாவது முறையாக அந்த நபர் மூர்க்கத்தனமாக எனது இடது கையை ஆவேசத்துடன் பிடித்து கீழே தள்ளி உருட்டி விட்டார்.” என்று கூறியுள்ளார். இதன் வழியாக இதை திட்டமிட்ட தாக்குதல் என்பது தெளிவாகிறது. தமிழக அரசு இனிமேலும் காலம் தாழ்த்தாமலும் திசை திருப்பாமலும் திரு.பெ.மணியரசன் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டறிந்து தண்டனை அளித்திட வேண்டுமென தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

இவண்
க.சக்திவேல்
தலைவர்
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*