ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வரவேற்கிறது

28-05-2018

பத்திரிக்கை செய்தி

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக  தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதை தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வரவேற்கிறது.

தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர்

க.சக்திவேல் அறிக்கை.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பல ஆண்டுகளாக நடைபெற்ற போராட்டத்திற்கு குறிப்பாக கடந்த நூறு நாட்களாக தொடர் போராட்டம் நடத்திய தூத்துக்குடி மக்களின் உணர்வுப்பூர்வமான போராட்டம் வெற்றியில் முடிந்துள்ளது. ஆனால், இந்த வெற்றிக்காக தூத்துக்குடி மக்களின் உயிர் தியாகங்கள் நடந்தேறியுள்ளது வேதனையானது.  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையை முன்னரே வெளியிட்டருந்தால் உயிர் இழப்புக்களை தவிர்த்து இருக்கலாம். காலம் தாழ்த்தி இத்தகைய அறிவிப்பு  வெளியிட்டு இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நீதிமன்றங்களை நாடி, மீண்டும் நடத்த இயலாதாவாறு  நீதி மன்றங்களில் சிறப்பான முறையில் வாதங்களை எடுத்து வைத்திடும் கடமையையும் தமிழக அரசு ஆற்றவேண்டுமென தமிழக முற்போக்கு மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது… அது தவிர பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கிடுவதோடு, இது தொடர்பாகஅப்பாவி மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து குற்ற வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

க.சக்திவேல்,

தலைவர்,

தமிழக  முற்போக்கு  மக்கள்   கட்சி.

tmmkatchi@gmail.com

www.tmmkatchi.org

9840530610

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*