தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டிற்குக் காரணமான‌வர்கள் அனைவரும் குற்ற வழக்குகள் வழியாகத் தண்டிக்கப்பட வேண்டும்

23-05-2018

பத்திரிக்கை செய்தி

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூட்டிற்குக் காரணமான‌வர்கள் அனைவரும் குற்ற வழக்குகள் வழியாகத் தண்டிக்கப்பட வேண்டும்

காவல்துறையின் போக்குச் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது

தூத்துக்குடி மக்களுக்கு உறுதி அளித்துப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு முன்வர வேண்டும்.

 

தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர்

க. சக்திவேல் அறிக்கை

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான துப்பாக்கி சூடு தேவைய்ற்ற முறையில் திட்டமிட்டு செயல்படாத காவல்துறையின் திறனை வெளிப்படுத்தி உள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட 11 பேரும் தலை மற்றும் மார்புப் பகுதிகளில் குண்டடிப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். மக்கள் பெருமளவில் 100ஆவது நாள் போராட்டத்தில் கலந்துக் கொள்வார்களென ஆலை நிர்வாகமே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ள போது அதுவும் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் காவல்துறை முதலில் ஏன் ஆயிரக்கணக்கில் மக்களைக் கூட விட வேண்டும். தடை உத்தரவு உள்ள நிலையில், பழைய பேரூந்து நிலையம் அருகே கூட்டம் நடத்த என் அனுமதி வழங்கப்பட்டது. இப்படி, காவல்துறையின் முறையற்ற போக்கும் முரண்பாடு கொண்ட செயல்பாடுகளும் மிகுந்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அரசு அறிவித்துள்ள நீதி விசாரணை கண்துடைப்பு நாடகமாகத் தெரிகிறது. குற்றவியல் வழக்குப் பதியப்பட்டுச் சிபிசிஜடி விசாரணைக்குத் தமிழக அரசு உத்திரவிடவேண்டும். அரசு அறிவித்துள்ள நீதி விசாரணை கண்துடைப்பு நாடகமாகத் தெரிகிறது. குற்றவியல் வழக்குப் பதியப்பட்டுச் சிபிசிஜடி விசாரணைக்குத் தமிழக அரசு உத்திரவிடவேண்டும். அது மட்டுமின்றி, இந்தத் துப்பாக்கி சூட்டிற்குக் காரணமான‌வர்கள் அனைவரும் குற்ற வழக்குகள் வழியாகத் தண்டிக்கப்பட வேண்டும்

மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாகக் கூறி தூத்துக்குடி மக்களுக்கு உறுதி அளித்துப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழக அரசு முன்வரவேண்டுமெனத் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது

 

.சக்திவேல்,

தலைவர்,

தமிழக  முற்போக்கு  மக்கள்   கட்சி.

tmmkatchi@gmail.com

www.tmmkatchi.org

9840530610

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*