காவிரி செயல்  திட்டத்தைப் பெற்று தந்த‌ உச்ச நீதி மன்றத்தின் ஆணையை வரவேற்கிறோம்

பத்திரிக்கை செய்தி – 18-05-2018

காவிரி செயல்  திட்டத்தைப் பெற்று தந்த‌

உச்ச நீதி மன்றத்தின் ஆணையை வரவேற்கிறோம்.

இந்தியாவில் கூட்டாச்சி முறைக்கு

உச்ச நீதி மன்ற ஆணை வலு சேர்த்துள்ளது.

தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர்

க. சக்திவேல் அறிக்கை

தமிழக விவசாயிகளின் நெடுநாளைய போராட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் முடிவு கட்டியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடும் திருத்தப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை ஏற்றுக் காவிரி மேலாண்மை ஆணையத்தை நடப்பு பருவ காலத்திற்கு முன்பு செயல்படுத்த வேண்டும். இதனை அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்க‌தக்கது.

தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் அநீதி இழைத்து விட்டதாகக் கூடச் சில கட்சிகளும் இயக்கங்களும் குறை கூறின. இந்நிலையில், காவிரி நடுவர் மன்றம் அமைத்திட, இடைக்காலத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட, இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட என்று பல நிலைகளிலும் உச்ச நீதி மன்றம் தான் தமிழகத்திற்கான நியாயத்தின் பக்கம் நின்று உள்ளது. இந்த ஆணையின் வழியாக தேசிய இனங்களின் உரிமைகளைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை உச்ச நீதி மன்ற ஆணை தந்துள்ளது. அந்த வகையில், காவிரி இறுதி தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து காவிரி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த திருத்தப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை ஏற்ற‌ உச்சநீதிமன்றத்தின் ஆணையைத் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வரவேற்கிறது. உச்சநீதிமன்றத்தின் ஆணையைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரிய திட்டத்திற்கான செயல் வடிவத்தினை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென மத்திய அரசை தமிழக முற்போக்கு மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது..

க.சக்திவேல்,

தலைவர்,

தமிழக  முற்போக்கு  மக்கள்   கட்சி.

tmmkatchi@gmail.com..

www.tmmkatchi.org

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*