பெட்ரோல் – டீசல் விலை உயர்வு மக்கள் தலையில் பேரிடி!

பத்திரிக்கை செய்தி

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு மக்கள் தலையில் பேரிடி!

தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர்

க. சக்திவேல் கண்டனம்

ஏப்ரல் 24 முதல் கர்நாடக‌ தேர்தலுக்காக உயர்த்தாமல் இருந்து விட்டு, மீண்டும் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை துவக்கி உள்ளது மத்திய அரசு. பெட்ரோல் , டீசல் விலையைஉயர்த்திப் பா.ஜ.க. அரசு மக்களைப்  பெரும் துன்பத்திற்கு ஆளாக்க வேண்டும் என்று முடிவெடுத்து செயல்படுகிறதா? அல்லது இவைகள் “சாதனைகள்” என்ற பெயரில் மக்களுக்குவேதனைகளைத் தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என்று ஒரு கேள்விக் குறி மக்கள் மனதில் கவலையுடன் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 78.16 , டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 70.49 உயர்ந்துள்ளது. பன்னாட்டு விலை அடிப்படையில் பார்த்தாலும் இந்த அளவுக்கு விலைஉயர காரணமில்லை. பெட்ரோலியப் பொருட்களின் விலையில் பெரும்பகுதி மத்திய ,மாநில அரசுகளின் வரிகள், பெட்ரோலிய முகவர்களுக்கு அதிகரிக்கப்பட்டு அளிக்கப்பட்டு வரும்தரகு போன்றவைகள் தான். மேலும், எத்தனால் கலப்பு 10% இருக்கையில் விலை எப்படி ஏற்றப்படுகிறது என்பது புரியவில்லை. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை ஏன்இன்னும் சரக்கு, சேவை வரி விதிப்பில் கொண்டு வரவில்லை என்பதும் புரியாத புதிராக உள்ளது.

பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தி, அனைத்து அத்யாவசிய பொருட்கள் விலை உயரக்கூடிய சூழ்நிலை தான் தற்பொழுது ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இம்முடிவால் ஏழை, நடுத்தர மக்கள் பெருமளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள். மக்கள் தலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரியத்தைத் தான் மத்திய பாஜக‌ அரசு தொடர்ந்து செய்து கொண்டுவருகிறது.

மத்திய அரசு உடனே பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் மக்களும், நாடும் பெரிய பொருளாதாரப் பின்னடைவையே சந்திக்க‌ நேரிடும் என்றுகூறி தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் எங்களது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கணிசமாகக் குறைத்திட மத்தியஅரசு முன்வரவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.

க.சக்திவேல்

தலைவர்

தமிழக  முற்போக்கு  மக்கள்   கட்சி

9840530610

tmmkatchi@gmail.com

www.tmmkatchi.org

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*