காவிரி பிரச்சனையில் உச்ச நீதி மன்றத்தில் வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு அளித்திருப்பதை வரவேற்கிறோம்

பத்திரிக்கை செய்தி – 14-05-2018 

 

காவிரி பிரச்சனையில் உச்ச நீதி மன்றத்தில் வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு அளித்திருப்பதை வரவேற்கிறோம்.

இதை முன்னரே மத்திய அரசு செய்திருக்கலாம்.

 

தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர்

க. சக்திவேல் அறிக்கை

வரைவு செயல் திட்டத்தினை மேலோட்டமாகப் பார்க்கும் போது, காவிரி நதி நீர் ஆணையத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில் இரண்டு குழுவுக்கான செயல்திட்டத்தினை ஏற்படுத்தி மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள வரைவு செயல் திட்டமானது வரவேற்கக்கூடியது. மத்திய அரசு சமர்ப்பித்துள்ள இந்தச் செயல் திட்டமானது அடிப்படையில் காவிரி நதிநீர் பிரச்சனையில் எழுந்துள்ள பல்வேறு நடைமுறை சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், காவிரி நதியில் கட்டப்பட்டுள்ள அணைகளின் மாநில உரிமையையும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் கருத்தில் கொண்டுள்ளது வரவேற்கக்கூடியது. அதே நேரத்தில்,முழுமையான அதிகாரம் கொண்ட அமைப்பாக இந்தச் செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்திருப்பதும் வரவேற்கக்கூடியது தான். இந்தச் செயல் திட்டத்திற்குப் பெயர் வைப்பதையே சில மாநிலங்களில் பிரச்சனை ஆக்கி இருப்பதால், பெயரை உச்ச நீதி மன்றமே தீர்மானிக்க வேண்டுமெனக் கூறியிருப்பது தான் சரியான ஒன்று தான். ஆனால், இந்தச் செயல் திட்டத்திற்குக் காவிரி நீர் மேலாண்மை திட்டம்,2018 என மத்திய அரசு பெயரிட்டுள்ளது வரவேற்ககூடியது. ஏறக்குறைய காவிரிநீர் ஆணையம் அளித்த தீர்ப்பை ஒட்டியே இந்தச் செயல் திட்டம் அமைந்துள்ளது.

இந்த அணுகு முறையை உச்ச நீதிமன்றம் முதலில் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மத்திய அரசு செயல் திட்டத்தை அறிவித்து இருந்தால், இந்தக் காலக் கட்டத்தில் நடைபெற்ற போராட்டங்களைத் தவிர்த்திருக்கலாம்.

இந்த நிலையில், வரைவு செயல் திட்டம் குறித்துச் சரியான அணுகு முறையை மேற்கோண்டு இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய வகையில் வருகின்ற புதன்கிழமை அன்று தமிழக அரசு செயல்பட வேண்டுமெனத் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது..

க.சக்திவேல்,

தலைவர்,

தமிழக  முற்போக்கு  மக்கள்   கட்சி.

 

தொடர்புக்கு : 9840530610

தலைமையகம்: 40, வடக்கு மாட வீதி, நுங்கம்பாக்கம், சென்னை-600034.

info@tmmkatchi.org, tmmkatchi@gmail.com ,  www.tmmkatchi.org

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*