உச்ச நீதி மன்றத்தின் இன்றைய  ஆணை காவிரி பிரச்சனையில் நம்பிக்கை தருகிறது

உச்ச நீதி மன்றத்தின் இன்றைய  ஆணை காவிரி பிரச்சனையில் நம்பிக்கை தருகிறது.

இனி மேலும் காலம் தாழ்த்தாமல் மே மாதம் 14ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட மத்திய அரசு  முன் வரவேண்டும். 

தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர்

க. சக்திவேல்

தமிழக விவசாயிகளின் உயிர்நாடி பிரச்சனையாக உள்ள காவிரி நதி நீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய வகையில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய ஆணை வழி வகுத்து உள்ளது. மேலும், இது குறித்து தேசிய கட்சிகளின் தலைமைகள் குறிப்பாக , பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏதும் கருத்துரைக்காமல் இருப்பது இந்திய தேசத்திற்குச் செய்யும் துரோகம் ஆகும். கர்நாடாகத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய தலைமைகள் நியாயத்திற்காகப் போராட முன்வராதது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்நிலையில், மே மாதம் 14ஆம் தேதி அன்று காவிரி ஆணையத் தீர்ப்பை நடைமுறைப்படுத்திட திட்டத்தினை மத்திய அரசு சபர்மிக்க வேண்டுமென உச்சநீதி மன்றத் தீர்ப்பு அமைந்து நம்பிக்கை தந்துள்ளது. கர்நாடாகத் தேர்தலும் மே 12ஆம் தேதி முடிவடைந்து எந்தக் காரணமும் சொல்ல முடியாத நிலையை உரு

இதே போல, 2008ஆம் ஆண்டுக் கர்நாடாகாவில் தேர்தல் நடந்த போது, ஒக்கேனகல் கூட்டு குடிநீர் திட்டத்தைத் தேர்தலுக்காக வற்புறுத்த போவதில்லை என அப்போதைய தி.மு.க அரசு அறிவித்தது. அந்த அடிப்படையில், உச்ச நீதி மன்ற தீர்ப்பை பார்த்தாலும், அந்தத் தேர்தல் முடிவடைய ஒரு வாரமே உள்ள நிலையில், தள்ளிப் போட்டிருப்பதைத் தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக எண்ண முடியவில்லை. மாறாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஒத்துழைப்போடு, அமையான சூழ்நிலையில் மட்டுமே பெறப்படும் திட்டமானது உறுதியான நடைமுறைப்படுத்தக் கூடிய ஒன்றாக இருந்திடும்.

இந்நிலையில், மே 14ஆம் தேதியும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட  மத்திய அரசு முன்வரவில்லையென்றாலும் உச்ச நீதிமன்றமும் மீண்டும் தள்ளிப் போட்டால் அது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். அதற்கான நிலைப்பாட்டோடு,  மத்திய அரசு இருக்காது என்ற நிலைப்பாட்டோடு,  மே 14ஆம் தேதியும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட மத்திய அரசு முன்வரவேண்டுமென தமிழக முற்போக்கு மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது..

.சக்திவேல்,

தலைவர்,

தமிழக  முற்போக்கு  மக்கள்   கட்சி.

tmmkatchi@gmail.com

www.tmmkatchi.org

தொடர்புக்கு : 9840530610

தலைமையகம்: 40, வடக்கு மாட வீதி, நுங்கம்பாக்கம், சென்னை-600034.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*