தமிழக மாணவர்களுக்கு வெளி மாநில மையங்களில் நீட் தேர்வு – உச்ச நீதி மன்ற தீர்ப்பு தவறானது

பத்திரிக்கை செய்தி – 04-05-2018

தமிழக மாணவர்களுக்கு வெளி மாநில மையங்களில் நீட் தேர்வு

உச்ச நீதி மன்ற தீர்ப்பு தவறானது

தமிழக மாணவர்களுக்குத் தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்

தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர்

க. சக்திவேல் அறிக்கை

கொடுமை கொடுமையெனக் கோவிலுக்குப் போனா அங்க ஒரு கொடுமை தலைவிரித்து ஆடியது போன்று தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களில் உள்ள நீட் தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வு எழுத வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தின் ஆணை தவறெனக் கூறாமல் சிபிஎஸ்இ நிர்வாகக் கூற்றை ஏற்றுத் தேர்வுக்குக் குறுகிய காலமே இருப்பதால் இந்த ஆண்டு முடியாது என்று கூறியிருப்பது தவறான தீர்ப்பாகும். காலங்கள் மாறி, அறிவியல் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு சிபிஎஸ்இ நிர்வாகம் கூறியிருப்பதை உச்சநீதிமன்றம் நம்பி உள்ளது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் சந்தேகத்தை ஏற்படுத்தும் உச்ச நீதி மன்றமானது தமிழக மாணவர்களின் நலனை பார்ப்பதை விடச் சிபிஎஸ்இ நிர்வாக வசதியை மட்டும் பார்த்து உள்ளது.

தமிழக மாணவர்களுக்குத் தமிழக மையங்களை ஒதுக்குவதில் மிகப் பெரிய வேலையும் இல்லை. நீட் தேர்வு முழுமையும் கணினிமயமாக்கப்பட்டு உள்ள நிலையில் தமிழக மாணவர்களுக்கு மையங்களை ஒதுக்குவதில் பெரிய சிக்கலும் இல்லை. மாற்றாக, இப்படி வெளி மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டவர்களுக்கு என்று தமிழகத்தில் ஏதேனும் ஒரு மையத்தை ஒதுக்கி இருக்கலாம். இன்னும் காலம் கடந்து விடவில்லை. சிபிஎஸ்இ நிர்வாகம் இப்பொழுதாவது சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

எது எப்படி இருப்பினும், தமிழக அரசு உடனடியாக இத்தகைய மாணவர்களைக் கண்டறிந்து அவர்கள் வெளிமாநில மையங்களுக்குச் சென்று வரவும், தங்கிடவும் ஏற்பாடுகளைச் செய்திட முன்வரவேண்டுமெனத் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

 

க.சக்திவேல்,

தலைவர்,

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி.

 

tmmkatchi@gmail.com

www.tmmkatchi.org

 

தொடர்புக்கு : 9840530610

தலைமையகம்: 40, வடக்கு மாட வீதி, நுங்கம்பாக்கம், சென்னை-600034.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*