31-03-2018 பத்திரிக்கை செய்தி

பத்திரிக்கை செய்தி

காவிரி பிரச்சனையில்

மத்திய அரசு மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு

தமிழக அரசின் செயல் வரவேற்கத்தக்கது.

மத்திய அரசு காலம் தாழ்த்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர்

க. சக்திவேல் அறிக்கை

காவிரி நதி நீர் பிரச்சனையில்  உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி வழங்கி  தீர்ப்பில் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை அமுல்படுத்தக்கூடிய திட்டத்தை  ஆறு வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டுமென்றது. அத்தகைய திட்டம் என்பது காவிரி மேலாண்மை வாரியமாகத் தான் இருந்திட வேண்டுமென்பது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதால் மட்டுமல்ல அத்தகைய மேலாண்மை வாரியத்தை தான் மத்திய அரசு பக்ரா பீஸ், கிருட்டிணா நதிநீர் பங்கீட்டிற்கும் மத்திய அரசு அமைத்துள்ளது. எனவே, முந்தைய நதிநீர் பங்கீடுகளுக்கு ஒரு திட்டமும் காவிரி நதிநீர் பங்கீட்டிற்கு வேறோரு திட்டத்தையும் மத்திய அரசு  செயல்படுத்த முடியாது. உச்ச நீதி மன்றம் தெளிவாக ஆறு வாரங்களுக்குள் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமன்பதையும் ஒரு காலத்திலும் நீட்டிக்கப்படமாட்டாது  என்று கூறிய பின்னரும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கிறேன் என்று  மனு தாக்கல் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடாத  மத்திய அரசு மீது தமிழக அரசு நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ள தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. தமிழக அரசிற்கு நீதி மன்ற நடவடிக்கையே இது காதும் காவிரி பிரச்சனையில் கைகொடுத்துள்ளது. காவிரி நடுவர் மன்றம் அமைத்திட, இடைக்கால தீர்ப்பை அரசிதழில் வெளியிட, இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட என்று பல நிலைகளிலும் உச்ச் நீதி மன்றம் தான் தமிழகத்திற்கு என்று கூறுவதை விட, நியாயத்தின் பக்கம் நின்று உள்ளது. அந்த வகையில், காவிரி இறுதி தீர்ப்பை   உச்ச  நீதி மன்றம் அமுல்படுத்திடும் வழிவகை காண தமிழக அரசின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உறுதுணையாக இருந்திடும் என்ற வகையில் தமிழக அரசின் செயலை  தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வரவேற்கிறது.

க.சக்திவேல்,

தலைவர்,

தமிழக  முற்போக்கு  மக்கள்   கட்சி.

tmmkatchi@gmail.com

www.tmmkatchi.org.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*