தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

– தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல்

தமிழ் அடையாளத்தை மீட்டெடுக்கவும்

தமிழர் உரிமைகளைக் காத்திடவும்

தமிழ் புத்தாண்டில் உறுதி எடுப்போம்.

தமிழக முற்போக்கு மக்கள் கட்சித்

தலைவர் க.சக்திவேல்

தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

அறிவியல் வழியாகவும் சித்திரை ஒன்றே தமிழர்களின் புத்தாண்டு ஆனால் திராவிடச் சதியாளார்களின் மாய வலைக்குள் விழுந்து தமிழ் புத்தாண்டை தை ஒன்று எனக் கூறுவது ஏன் எனத் தெரியவில்லை. உலகின் அனைத்து ஆண்டுகளும் ஒன்று நிலவின் அடிப்படை அல்லது சூரியனின் அடிப்படையில் அமைந்தது. நிலவின் அடிப்படையில் அமைந்த ஆண்டே துல்லியமாகக் கணிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழரின் ஆண்டுக் காலம் நிலவினை அடிப்படையில் அமைந்தது. தமிழர்கள் நிலவின் இயக்கத்தைக் கொண்டு மாதங்களைக் கணக்கிட்டனர் என அக நானூறு கூறுகிறது.இருப்பினும், ஆண்டுகளின் பெயர்கள் தமிழில் இல்லையே என்று கூறி தமிழ் புத்தாண்டு சித்திரையில் பிறக்கவில்லை என்று கூறுகிறார்கள். “மதி என்றால் அளவு. கால அளவைக் கணிக்க நிலவு உதவியதால் தமிழர் அதனை மதி என்றனர். ஒரு முழுமதிக்கும் இன்னொரு முழுமதிக்கும் இடையில் உள்ள காலம் மாதம் என்றும் திங்கள் என்றும் வழங்கப்பட்டது.” இது ஆரியர்களால் மாசம் என்றாக்கப் பட்டது. தமிழில் வழங்கிய மாதப்பெயர்கள் ஓரைப் பெயர்கள் ஆகும். இவை சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, இரட்டை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை ஆகியவையாகும். இப் பெயர் மரபு, சூடாமணி நிகண்டில் பாடல் காணக் கிடைக்கின்றன. “வியாழன் இராசி வட்டத்தை ஐந்து முறை சுற்றி வருதலாகிய அறுபது ஆண்டுகள் கொண்ட கால அளவை ஆரியருக்குரியதன்று” என்று மக்ளீன் கூறுகிறார். இந்தச் சான்றுகள் அடிப்படையில் நிலவு சுழற்சி முறையால், சித்திரையைத் தான் புத்தாண்டு நாளாகக் கொண்டாட இயலும். ஆனால் இவை எல்லாவற்றையும் ஒதுக்கி தள்ளி விட்டு தை ஒன்றே தமிழரின் புத்தாண்டு என்று கூறுவது தமிழரின் வான அறிவியல் அறிவை கொச்சைப்படுத்துவது ஆகும்.

ஆனாலும் திராவிடச் சிந்தனையாளர்கள் தை ஒன்றை தமிழ் புத்தாண்டு என்று கூறக் காரணம் என்னவென்றால் அதன் வழியாகத் தமிழரின் ஒரு கொண்டாட்டத்தைக் குறைத்தல்,தமிழர்கள் அறிவியல் பார்வையற்றவர்களெனக் காட்டுதல், அதன் வழியாகத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களின் முதன்மையைக் குறைத்து மறைக்கச் செய்தல். இத்தகைய திராவிட அடையாள அழிப்பு செயலுக்குத் தமிழர்களைத் துணையாக இருக்கச் செய்து திராவிடம் வென்று உள்ளது. எனவே திராவிட மாயையில் சிக்காமல் சித்திரை ஒன்றை தமிழர் புத்தாண்டு என்போம் தை ஒன்றை தமிழர் திருநாள் பொங்கல் என்போம். வட மொழிப் படுத்தப் பட்ட தமிழரின் காலப் பெயர்களைத் தமிழ் படுத்த உறுதி ஏற்போம். தமிழர்கள் தங்களின் அடையாளத்தை இழந்ததால் தான் இன்றைக்கு உலகம் முழுமையும் தமிழர்கள் தங்கள் உரிமைகளை இழந்து வருகிறார்கள். இந்நிலையில், தமிழர்கள் தங்கள் நிலைப்பாடுகளை அறிவியல் வழியாகச் சீர்தூக்கி பார்க்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். தமிழ் அடையாளத்தை மீட்டெடுக்கவும் தமிழர் உரிமைகளைக் காத்திடவும் இந்தத் தமிழ் புத்தாண்டில் உறுதி எடுப்போம்.

இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

இவண்

க.சக்திவேல்,

தலைவர்,

தமிழக  முற்போக்கு  மக்கள்   கட்சி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*