தமிழக விவசாயிகள் மாநாட்டு தீர்மானங்கள் 25-.3-2018

தமிழக விவசாயிகள் மாநாட்டு தீர்மானங்கள்             

25-03-2018 அன்று தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் விவசாய அணி சார்பாக விருத்தாசலத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் விவசாய அணி செயலாளர் விருத்தாசலம் ப. மதியழகன் தலைமை தாங்க தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் க.சக்திவேல். துணைத்தலைவர் துளசி வீராச்சாமி செயலாளர் விஜயகுமார்,  அகில இந்திய காந்தி பேரவைத் தலைவர் தினகரன் இயற்கை சின்னையா நடேசன, அரசியல் ஆலோசகர் ராஜமாணிக்கம்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  தமிழக விவசாயிகள் மாநாட்டில் நிறைவேற்ற தீர்மானங்கள் பின்வருமாறு.      

 

1.கரும்பு நிலுவைத் தொகையை உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

24 தனியார் கரும்பு ஆலைகள் மொத்தமாக ரூ 1347 கோடி பாக்கி வைத்துள்ளன. கூட்டுறவு மற்றும் பொதுத் துறை ஆலைகள் ரூ 236 கோடி பாக்கி வைத்துள்ளன. கரும்பு விவசாயிகள் பல முறை வேண்டுகோள் விடுத்தும் தமிழக அரசு கரும்பு நிலுவைத்தொயைப் பெற்றுத்தர எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. குறைந்தபட்சம் கூட்டுறவு மற்றும் பொதுத் துறை ஆலைகள் பாக்கி வைத்துள்ள நிலுவைத் தொகையையாவது அளித்திட தமிழக அரசு முன் வந்திருக்கவேண்டும்.அமைச்சர் எம்.சி. சம்பத் 6-1-2012  அன்று  அளித்த பேட்டியில், ஜனவரி 12-ஆம் தேதிக்குள் கரும்பு விவசாயிகளுக்கு  ரூ.1600 கோடி நிலுவைத்தொகையை வழங்கும்படி சர்க்கரை ஆலைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார். இரண்டு மாதங்களுக்கு பின்னரும் அதி ஒரு சிறு பகுதியையை கூட அளிக்கப்படவில்லை. ஆனால் இதுவரை, சில தனியார் ஆலைகள் பாக்கித் தொகையில் சிறிதளவு அளித்துவிட்டு முழுத்தொயையும் பெற்றுக் கொண்டதாக கரும்பு விவசாயிகளிடம் எழுதி வாங்கிக்கொள்வதாக கூறுகிறார்கள்.இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. எனவே, தமிழக அரசு தலையிட்டு னியார் , கூட்டுறவு மற்றும் பொதுத் துறை ஆலைகள் பாக்கி வைத்துள்ள முழுத்தொகையும் முழுமையாக அளித்திட வழிவகை செய்திடல் வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

  1. கரும்பு,நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும.         

தமிழக அரசு இந்த ஆண்டுக்கான கரும்புக்கான ஆதார விலையை அறிவிக்கவில்லை. மேலும் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வைத்துள்ள நிலையில் புதியதாக கரும்பு விவசாயிகளுக்கு வருமானத்தில் பங்கு என்ற அடிப்படையை அறிவித்து உள்ளது. பிற மாநிலங்களில் உள்ளதை விட கடுமையாக விவசாயிகள் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே இருக்கிற முறையில் தமிழக கரும்பு விவசாயிகளுக்கு ஆதார விலையை முதலில் தமிழக அரசு அறிவிக்கவேண்டும். மேலும் அதைப்போல நெல்லுக்கான ஆதார விலையாக அறிவிக்கப்பட்டுள்ள சன்னரகத்திற்கு ரூபாய் 1650 மோட்டா ரகத்திற்கு ரூபாய் 1600 என அறிவித்து இருப்பது போதாது. நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டுமென இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

  1. மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அரசிதழில் வெளியிட வேண்டும்.

காவிரி நதி நீர் தீர்ப்பாய ஆணைக்கு எதிரான வழக்கில்    தீர்ப்பாய ஆணையை செயல்படுத்தும் திட்டத்தைதீர்ப்பு அளிக்கப்பட்ட ஆறு வாரங்களுக்குள் மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டுமென உச்சநீதிமன்றம்இந்த ஆண்டு பிப்ரவரி 16ஆம் நாள் அளித்த  தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின்நீர்ப்பாசனத் துறையும் நான்கு மாநிலங்களின் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டியுள்ளது. ஆனால், காவிரிமேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த தெளிவான அறிவிப்பு இது வரை வெளியிடப்படவில்லை.  .உச்சநீதிமன்ற கெடு முடிய ஒரு வாரமே உள்ள நிலையில், மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மைவாரியம் அமைத்து அரசிதழில் வெளியிட வேண்மென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. பயிர்காப்பீடுதிட்டத்தை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் வழியாகநடைமுறைப்படுத்தவேண்டும்.

பயிர் காப்பீட்டு தொகையை பெறுவதில் பல்வேறு இன்னல்களை விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள்.இத்தகைய திட்டத்தை காப்பீடு என்றக் காரணத்தால் பொதுவாக செயல்பட்டுவரும் காப்பீடு நிறுவனங்கள்வழியாக நடைமுறைப்படுத்தப்படும் போது காப்பீடு தொகையை வழங்காமல் இருப்பதற்கான வழிமுறைகளைஅவர்கள் மேற்கொள்வதால், பயிர் காப்பீடு திட்டத்தின் பயனை விவசாயிகள் பெற‌ முடியாத நிலைஏற்பட்டுள்ளது. மேலும் படயிர் காப்பீடு திட்டத்தின் அளவீடு வருவாய் கிராமமாக இருப்பதால் மாநிலத்தின் ஒருஇடத்தில் இருந்துகொண்டு கணிணி வழியாக செயல்பட்டு வரும் தனியார் மற்றும் பொதுத்துறை காப்பீடுநிறுவனங்கள் விவசாயிகளை ஏமாற்றும் வகையில் சிலருக்கு காப்பீடு அளிப்பது, சில கிராமங்களைஒதுக்குவது, பெயருக்கு காப்பீடு அளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இதனால்,விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.  பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கவேண்டும் , காப்பீட்டு தொகையை வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென  விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலை மாறிட,  பயிர் காப்பீட்டுதிட்டத்தை  கூட்டுறவு வங்கிகளிடம் வழங்க வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5.பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்

                               பயிர் காப்பீடு செய்து அதன் வழியாக தங்கள் விவசாய இழப்பை சரிசெய்திடாலாமென்று காத்திருந்த லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் பயிர் காப்பீடு கிடைத்திடாமல் பெரும் இன்னலுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளார்கள். பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் எல்லா மாவட்டங்களிலும் நடத்திய பின்னரும் மத்திய மாநில அரசுகள் எத்தகைய முறையிலும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைத்திட நடவடிக்கை எடுக்காததை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. இனியும் காலம் தாழ்த்திடாமல தமிழக விவசாயிகள் உரிய நிவாரணம் பெற்றிட தமிழக அரசு முன்வரவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

  1. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு (NLC) நிலம் கொடுத்த அனைத்து விவசாய குடும்பத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் நெய்வேலி நிலக்கரி சுரங்க  நிறுவனத்தில்  வேலை அளித்திட வேண்டும்.

7.அனைத்து வேளாண் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்

விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய அனைத்து கடன்களையும் ரத்து செய்திட வேண்டும். சிறு குறு விவசாயிகள் என்று பாரபட்சம் பார்க்காமல் எல்லா வகையான கடன்களையும் ரத்து செய்திட தமிழக அரசு முன்வர வேண்டும். மேலும் சில வங்கிகள் கடனை வசூலித்திட தனியார் நிறுவனங்கள் என்ற பெயரில் குண்டர்களை வைத்து விவசாயிகளை மிரட்டி வசூல் செய்தும் வருகிறார்கள். இத்தகைய வங்கிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு  அனைத்து வங்கிகளிடம் விவசாயிகள் பெற்றுள்ள வேளாண் கடன்களையும் ரத்து செய்திட தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

8.புதிய 2014 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டமான நியாயமான இழப்பீட்டுக்கான உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு புனரமைப்பு வெளிப்படைதன்மை சட்டம் 2013ன் படி  இழப்பீடு மறுவாழ்வு புனரமைப்பு பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சியாளரும நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனமும்  மேற்கொள்ள வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

9.நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் பயன்பாடு நிறைவடைந்த மற்றும் பயன்பாட்டிற்கு தேவையற்ற நிலங்களை இதுகாறும் நிலம் கையகப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அளித்திட நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனம் முன்வரவேண்டும்.

  1. விவசாய நிலங்களின் விற்பனை விவசாயிகளுக்கு மட்டுமேபல்வேறு மாநிலங்களில் உள்ளது போன்று விவசாய நிலங்களை விவசாயிகளுக்கு மட்டுமே விற்பனை செய்திட வேண்டுமென்பதை தமிழக அரசு மாற்றம் செய்திட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
  2. ஹைட்ரோ கார்பன் மீத்தேன் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது.தமிழகத்தின் வளமான வேளாண் விளைநிலங்களை அழித்து பாலைவனமாக்க கொண்டு வரக்கூடிய ஹைட்ரோ கார்பன் மீத்தேன் திட்டங்களை செயல்படுத்தகூடாது என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
  3. வேளாண்மைக்கு உதவாத கால்நடையும்,கால்நடைக்கு உதவாத வேளாண்மைக்கும், ஒட்டுமொத்த நீராகரத்தை பாதுகாக்கத மீன்வளமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, இதை மாநில அரசு முழு கவனத்தில் கொண்டு எங்களோடு இணைந்து சீரமைக்க வில்லை என்றால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்

  1. விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம்

காவேரி வேளாண்மை வாரியத்தை உள்ளிட்ட மேற்படி கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால் தமிழகம் முழுவதும் விவசாயிகளை ஒன்று திரட்டி போராடுவோம் என்று இம் மாநாடு எச்சரிக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*