தமிழக முற்போக்குமக்கள் கட்சியின் விவசாய அணி கலந்தாய்வு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழக முற்போக்குமக்கள் கட்சியின்

விவசாய அணி கலந்தாய்வு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

நாள்: 24-02-2018

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் விவசாயிகள் அணி சார்பாக 24.02.2018 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டமானது விவசாய அணி தலைவர் திரு.மதியழகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தலைவர் திரு.க.சக்திவேல், துணைத் தலைவர் திரு.துளசி.வீராசாமி, செயலாளர் திரு.விஜயகுமார், பொருளாளர் திரு.மதன், ஆலோசகர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு:

1. விருத்தாசலத்தில் தமிழக விவசாயிகள் மாநாடு
தமிழக விவசாயிகள் பல்வேறு பிரச்சனைக்களுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளார்கள். ஒவ்வொரு வகை விவசாயிகளும் அந்தந்த பயிர்களுக்கு ஏற்ப பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். பொதுவாக, பயிர் காப்பீடு பெறுவது, கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகையைப் பெறுவது, நெல் கொள்முதலில் சிக்கல்கள், இப்படி பல பிரச்சனைகள் இருக்கின்றன. இதற்கான பரந்துப்பட்ட மாநில அளவிலான பார்வை தேவைப்படுகிற காரணத்தால் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் விவசாயிகள் அணி சார்பாக வருகிற மார்ச் மாதம் 25-ந் தேதி அன்று விருத்தாசலத்தில் தமிழக விவசாயிகள் மாநாட்டை நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது.

2. நெல், கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்

3. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

4. விவாயிகளுக்கு அளிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை இது வரை அளிக்கப்படவில்லை. இதனால், லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு உரிய நிவாரணத் தொகை அளித்திட மத்திய மாநில அரசுகள் உடனடியாக முன் வரவேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

5. நெய்வேலி நிறுவனத்திற்கு நிலம், வீடு கொடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் அவர்களுக்கான வாழ்வாதாரம் அளித்திடும் வகையில் மத்திய&மாநில அரசுகள் உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிலம் கையகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் 2014-ம் சட்டத்தின்படி, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதே நேரத்தில் கடந்த 2003-ல் தொடங்கி கையகப்படுத்தப்பட்ட நில உரிமையளர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தவிர, 1955-ல் நிலம் கையகப்படுத்தப்பட்ட போது 60 கிராமங்களுக்கு வழங்கப்பட்டது போலவே 2 ஏக்கர் நிலம் மற்றும் 10 சென்ட் வீட்டு மனை வழங்கியது போலவும், 2 – வது சுரங்கத்திற்கு நிலம் வழங்கிய வெள்ளூர், வேப்பங்குறிச்சி, அஜிஷ் நகர் கிராம மக்களுக்கு வேலையும், வீட்டு மனையும் மட்டும் வழங்கப்பட்டது. 2 – விரிவாக்கதின் போது எதுவும் செய்யாத நிலைவுள்ளது. ஆக, இவர்களுக்கும் 1955-ல் வழங்கியது போலவே வழங்கிட வேண்டும்.

6.உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை
ஆறுவாரத்திற்குள் அமைத்திட வேண்டுமென மத்திய அரசை இக்கூட்டம்
கேட்டுக்கொள்கிறது

என மேற்படி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், எம்.ராஜசேகரன், ஜி.ராஜேந்திரன் (கம்மாபுரம்), ஜி.கௌஞ்சியப்பன், இ.சின்னப்பன் (கோபாலபுரம்), வி.கணேசன் (கருவெட்டி), ஆர்.சாரங்கபாணி (வளையமாதேவி) ஆகியோர் பங்கேற்றனர்.

—-
மதியழகன்
விவசாய அணி தலைவர்
+91 8220232944
+91 9840530610

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*