பத்திரிக்கை செய்தி – மத்திய அரசின் பட்ஜெட் -தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் க.சக்திவேல்

பத்திரிக்கை  செய்தி 

புதிய இந்தியாவை அல்ல இருக்கிற இந்தியாவை நினைத்து கூட‌ மத்திய அரசின் பட்ஜெட் இல்லை.

இது இந்தியாவின் பட்ஜெட் அல்ல, இந்திக்காக வாசிக்கப்பட்ட , வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கு  ஏதுமில்லாத பட்ஜெட். 

தமிழக  முற்போக்கு  மக்கள்   கட்சித்   தலைவர்

க.சக்திவேல்  அறிக்கை.

விவசாயிகளுக்கும் வேளாண்மைக்கும் திட்டங்கள் கூறப்பட்டு இருந்தாலும் வார்த்தை ஜாலங்கள் உள்ளதே தவிர விவசாயிகளுக்கு உதவுமா என்பது கேள்விக்குறி தான். ஆதார விலையை அனைத்து விவசாயப் பொருட்களுக்கும் உயர்த்தப்படும் எனக் கூறப்பட்டிருந்தாலும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட முதலாளிக்களுக்கு  ஏதுவாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பாராளுமன்ற தகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும் என அறிவித்திருப்பது, மருத்துவ துறைச் சார்ந்த அறிவிப்புக்கள் ,  தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

 அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பெரும்பாலும் முதலாளிக்களுக்கு சாதகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மிகப்பெரிய அளவில் கிராமப்புற வேலை வாய்ப்பின்மை உள்ள போது, அதை நீக்கக் கூடிய திட்டங்களாக எதையும் பார்க்க முடியவில்லை.

வருமான வரி வசூல் பெருகி உள்ள நிலையில் வருமான வரியில் சலுகை அளித்து இருக்கலாம். ருபாய் 40,000 மட்டுமே மருத்துவ, போக்குவரத்துக்கு என பொதுவான கழிப்பாக வேலையில் இருப்போருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகை குறைவான ஒன்று.முதலாளிக்களுக்கு ஏதுவாக பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தாரை வார்க்க திட்டங்கள் உள்ளன.

இதுவரை இல்லாத வகையில்  முதன்முதலாக பட்ஜெட்டில் இந்தியில் படிப்பது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ந்ல்லதல்ல என்பதையும் உணராமல் பாஜகவின் தனது இந்தி திணிப்பை பட்ஜெட்டில் வெளிப்படுத்தி உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வேலை வாய்ப்புக்களை பெருக்க எந்த உருப்படியான‌ திட்டமும் இல்லை. வளர்ச்சிக்கு ஏதுமில்லாத வார்த்தை ஜாலங்களை கொண்டு கோர்க்கப்பட்ட பட்ஜெட்டாகத் தான் உள்ளது.                                                            

 

இவண்

க.சக்திவேல்,
தலைவர்,
தமிழக  முற்போக்கு  மக்கள்   கட்சி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*