எங்கள் தலைமை

தலைமை பொறுப்பாளர்கள்

 
க.சக்திவேல்
தலைவர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள பாலைவனம் சிற்றூரை பூர்வீகமாகக் கொண்டவரும் தஞ்சை மாவட்டம் ஓரத்தநாட்டை சொந்த ஊராக கொண்டவருமானவர். பள்ளிப் படிப்பை ஓரத்தநாடு, சென்னை என இரு இடங்களிலும் மேற்கொண்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை வ்ணிகவியலும், சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலை வ்ணிகவியலும் பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியும் பயின்றார். சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். விவேகானந்தா கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகிய இரண்டுக்கல்லூரிகளிலும் மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார். மாநிலக் கல்லூரியில் மாணவர் தலைவராக செயல்பட்ட போது அன்றைய தினம் இலங்கை அதிபராக இருந்த செயவர்த்தனேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க சென்னையில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் ஒன்று திரட்டி மாபெரும் ஊர்வலத்தை நடத்தினார்.

சென்னை சட்டக் கல்லூரியில் பயின்ற போது ஈழ ஆதரவு நிகழ்ச்சிகளை நடத்தியதோடு திம்பு பேச்சு வார்த்தைக்கு பின்னர் காவலில் வைக்கப்பட்டு இருந்த திரு. பிரபாகரன் உள்ளிட்டவர்கள் விடுதலைக்கான போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தினார். அது தவிர, திரு.வி.பி. சிங் மேற்கொண்டஊழலுக்கு எதிரான‌ பிரச்சாரத்திற்கு உறுதுணையாக சென்னையில் மாணவர்களை திரட்டி இவர் தலைமையில் மாநாடு நடத்தப்ப‌ட்டது. அம் மாநாட்டில் திரு.வி.பி. சிங் கலந்துக் கொண்டார்.

1994 ஆம் ஆண்டு காங்கிரசு கட்சியில் இணைந்து, 1996 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் பேரவூரணி தொகுதியில் காங்கிரசு சார்பில் போட்டியிட்டார். தமிழக காங்கிரசு பொதுச்செயலாளராக 1996லிருந்து 2004 வரை செயல்பட்டார். அகில இந்திய காங்கிரசு கமிட்டி உறுப்பினராகவும் பதவி வகித்தார். காங்கிரசு கட்சியின் பொருளாதாரக் கொள்கை ஏற்புடையின்மை காரணமாக, காங்கிரசை விட்டு விலகினார். பின்னர், மக்கள் மாநாடு என்ற அமைப்பை ஏற்படுத்தினார், அதுவே, மக்கள் மாநாடு கட்சி என்ற அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு, 2017ல் தமிழக முற்போக்கு மக்கள் கட்சி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

2004ஆம் ஆண்டு காமாராசரின் பொற்கால ஆட்சி மற்றும் 2005ல் உலக மயமாக்கம் ஒர் அடிமை பொருளாதரம், ஆகிய நூல்களை எழுதினார். தமிழ்நாடு தமிழருக்கே என்ற ஆய்வு நூலை 2010 ஆண்டு எழுதினார். தேசிய இனங்களின் வரலாறே உலக வரலாறு மற்றும் கால்டுவெலின் தமிழருக்கு எதிரான போக்கு ஆகிய் ஆய்வுரைகளை ஆற்றியுள்ளார்.2017 டிசம்பர் 16 & 17 தேதிகளில் மலேசியா நாட்டில் கிள்ளான் நகரில் நடைபெற்ற உலகத் தமிழர் தேசிய இன மீட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டு தமிழர்களின் இறையாண்மை என்ற ஆய்வுரையை வழங்கினார்.

துளசி வீராச்சாமி
துணைத் தலைவர்

போரூர் ஜெ.ஜெயவீரன்
துணைத் தலைவர்

சிவகங்கை க.கலைமணி
துணைத் தலைவர்

P.B.மதன் 
பொருளாளர்

பொறியாளர் வி.விஜயகுமார்
செயலாளர்

நன்மங்கலம் இமானுவேல்
செயலாளர்

புரசை N.லோகநாதன்   
ஆலோசனை குழுத் தலைவர்

பிராட்வே M.மணி
தொழிலாளர் அணிச் செயலாளர்

சிவகங்கை சி.சோலை 
செயலாளர் –  தென் மண்டல பொறுப்பாளர் 

வழக்கறிஞர்  வெஸ்லி ஜசக்
தேர்தல் பிரிவு செயலாளர்

வழக்கறிஞர் விஜயகுமார்
வழக்கறிஞர் பிரிவு செயலாளர்

விருத்தாச்சலம் மதியழகன்
விவசாயப் பிரிவுச் செயலாளர்

C.S. ராஜன்  
கலைப் பிரிவுச் செயலாளர்

வழக்கறிஞர் வி.அமுதா  
மாநில மகளிர் அணிச் செயலாளர்

S.நாகராஜன்
சென்னை மாவட்ட மாணவர் அணித் தலைவர்

நா.மணிகண்டன்
துணைச் செயலாளர்

 

உயர்மட்ட குழு உறுப்பினர்கள்

இளையான்குடி ந.சக்திவேல்

ECR D.மாரிமுத்து

சைதை ரா.கோபால்

G.P.நாகேந்திரன்

கோ.சந்திரசேகரன்

திருப்பரங்குன்றம் வள்ளி