previous arrow
next arrow
Slider

தேசிய இனங்களின் கூட்டாச்சியை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவில் ஏற்படுத்தவும், தமிழர் அடையாளத்தை மீட்டெடுக்கவும் பொங்கலில் உறுதி எடுப்போம் – அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

தலைமைச்செய்திகள்

தலைவர்
க.சக்திவேல்
 

இந்தியாவிலேயே ஊழல் லஞ்ச லாவண்யம் வெளிப்படையாக தலைவிரித்தாடும் மதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆள்கிற கட்சி, ஆண்ட கட்சி என்பதில் துவங்கி, ஆட்சியிலும் அரசியலிலும் தேர்தல்களிலும் ஊழல் மயமாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, ஊழலை நியாயப்படுத்தக்கூடிய மாநிலமாகவும்த மிழகம் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது.அரசியல்வாதிகள் ஒருபுறம் ஊழலை ஊக்குவிக்கிறார்கள் என்றால், ஊழலை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தமிழக மக்கள் மடை மாற்றப்பட்டுள்ளார்கள். இந்தியாவிலேயே தேர்தல்களில் வாக்குக்கு பணம் கட்டாயமாக்கப்பட்டுள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்றிய பெருமை தமிழக மக்களுக்கு தான் உண்டு. இதன் காரணமாக ஊழல்வாதிகள் பதவிகளுக்கு வருவதும் லஞ்ச லாவண்யம் அரசின் சொல்லப்படாத நியதியாகவும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழக வளர்ச்சி எந்த அளவிற்கு உயர்ந்து இருக்க வேண்டுமோ அது நடைபெறாமல், வறுமை கோட்டிற்கு கீழே இருப்போர் எண்ணிக்கை வேலையற்றோர் எண்ணிக்கை பெருக்கம் நாளுக்கு நாள் பெருகி வருவதோடு ஆட்சியின் அவலங்களால் நடுத்தர மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள்.எனவே,நேர்மையான ஆட்சிக்கான புதிய முன்னெடுப்புக்களை தமிழக மக்கள் மேற்கொண்டால் ஒழிய தமிழகத்தின் உண்மையான வளர்ச்சி கேள்விக்குரிய ஒன்றாக மாறிவருகிறது.இல்லையெனில்,  சில பணம் படைத்தோர்களுக்காகவும் ஊழல் பேர்வழிகளுக்காகவும் மட்டுமே ஏற்பட்டுள்ள வளர்ச்சியாக தமிழகத்தின் வளர்ச்சி மாறிபோக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களின்எ திர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுவிடும். ஆகவே, ஒரு நேர்மையான ஒளிமயமிக்க தமிழகத்தை உருவாக்கிட அர்ப்பணித்துள்ள தமிழக முற்போக்கு மக்கள் கட்சியோடு இணைந்து செயல்பட வருமாறு தமிழக மக்களை அழைக்கிறோம்.

உறுப்பினராக





தொடர்ப்புக்கு : 94983 82006